>>>எக்செல்லில் வாடிக்கையாளர் விரும்பும் தானாகவே பூர்த்தி செய்யும் ( Custom Auto fill) வசதி

 எக்செல்லில் ஓரு பட்டியலை தொடர்ந்து தட்டச்சு செய்யும்போது Auto fill என்ற வசதியை பயன்படுத்தி மிகுதியை தானாகவே பூர்த்தி செய்வதை பார்த்திருப்போம். உதாரணமாக Jan, Feb, Mar போன்ற மாதத்தின் பெயர்கள், Sunday, Monday, Tuesday போன்ற வாரத்தின் நாட்களை தானாகவே பூர்த்தி (Auto fill) செய்யும் வசதி மூலம் பயன்பெற்றிருப்போம். அவ்வாறே நாம் விரும்பும் மற்ற பட்டியல்களையும் எக்சலில் பெற முடியுமா? 
     உதாரணமாக ஒரு நிறுவனத்தின் விற்பனையை கோட்ட வாரியாக தயார் செய்ய கோட்டங்களின் பெயர் இந்த தானாக பூர்த்தி செய்யும் Auto fill வசதி மூலம் எவ்வாறு முடியும் என்பதை இப்போது காண்போம்.
    படம்1ல் உள்ளவாறு எக்சலின் கட்டளை பட்டியலில் (Menu bar)   உள்ள Tools என்பதை சொடுக்குக. உடன் திரையில் தோன்றும் பட்டியலிருந்து option என்பதை தெரிவு செய்க.
     பின்னர் திரையில் தோன்றும் உரையாடல் பெட்டியில் Custom lists என்ற பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர் திரையில் விரியும் Custom lists என்பதில் new list என்பதை தெரிவு செய்து வலதுபுறம் உள்ள list entries  என்ற பகுதியில் நாம் விரும்பும் பட்டியலின் பெயரை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக  கால்புள்ளியிட்டு தட்டச்சு செய்க. அல்லது இந்த பட்டியில் வேறு எங்காவது இருந்தால் import வசதி மூலம் உள்ளே கொண்டு வருக.
   பின்னர் add  பொத்தானை சொடுக்குக.உடன் இவ்வாறு உள்ளீடு செய்த பட்டியல் Custom Listல் தானாகவே சேர்ந்துவிடும்.
     பின்னர் Ok என்ற பொத்தானை சொடுக்குக. இப்போது நீங்கள் உருவாக்கிய பட்டியல் Auto fill வசதி மூலம் எக்சல் விரிதாளில் கொண்டு வர முடியும்.

No comments:

Post a Comment