>>>இயங்காமல் நின்றுபோனவன்தட்டிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல்

வன்தட்டானது திடீரென வேலைநிறத்தம் செய்துஇயங்காமல் நின்றுவிடும் சமயத்தில் இதுவரை பயன்படுத்திய தரவுகளை இழப்பேதுமில்லாமல் எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுதான் மிகப்பெரும்தலைவலியாகும்,
இவ்வாறான இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு நிம்மதிஇழந்து தவிக்கும் நேரத்தில் pc install என்ற இலவச கருவி உங்கள் உதவிக்கு வந்து உங்களுக்கு மன நிம்மதியை வழங்குகிறது,
சி இயக்ககம் தவிர மற்றவை எனில் இந்த கருவியை விண்டோவில் நிறுவியும், வன்தட்டு முழுவதும் எனில் வேறு கணினியில் இந்த கருவியை நிறுவி இயங்காமல் நின்றுபோன கணினியை இரண்டாவது இயக்ககமாக இணைத்துகொண்டு பின்வரும் படிமுறைகளின் படி செயல்படுத்துங்கள்
படிமுறை1: இந்த pc install file recovery என்ற கருவியை நிறுவுகை செய்வதற்காக இதனுடைய இயக்க கோப்பினை செயல்படுத்துங்கள் தோன்றிடும் திரையில் English என்பதை இதன்மொழியாக தேர்வுசெய்யுங்கள்என்னவகையான தரவை மீளப்பெறவேண்டும் என்பதற்கான இதன் இடதுபுறத்தில் உள்ள மூன்றுபொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக
தரவுகளைமட்டும் மீட்டாக்கம் செய்வதுஎனில் படிமுறை 6-க்கு நேரடியாக செல்க,இயக்ககங்களை மீட்டாக்கம் செய்வது எனில் படிமுறை 8-ற்கு நேரடியாக செல்க, அழித்த தரவுகளெனில் சாளரத்தின் மேலே இடதுபுறமுள்ள உருவத்தை சொடுக்குக
படிமுறை2: எந்த இயக்ககத்தை மீட்டாக்கம் செய்யப்போகின்றோம் என்பதை தெரிவுசெய்க,உடன் இந்த கருவியானது வன்தட்டின் பாகப்பிரிவினையை வருடி இதன் உள்ளடக்கத்தை பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது ,பெரும்பாலும் தருக்க இயக்ககத்திலிருந்தே தேவையான இயக்கத்தை தெரிவுசெய்க அதனால் உடன் வன்தட்டின் உள்ளடக்கங்கள் இருமுறை பட்டியலிடப்படும் c ,d, e,f,போன்று இயக்ககங்களின் பெயரை வரிசையாக தெரிவு செய்து இவற்றின் உள்ளடக்கத்தை வருடி பட்டியலிடச் செய்க,முன்காட்சி  பொத்தானை சொடுக்கி இதனை திரையில் சரிபார்க்கவும்,பின்னர் அடுத்த படிமுறைக்குசெல்வதற்கான next என்ற பொத்தானை சொடுக்குக,
படிமுறை 3: வருடச் செய்வதற்காக ஒருசிலநிமிடநேரம் எடுத்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட இயக்கத்தில் நீக்கம் செய்யப்பட்ட கோப்பகத்தின் உருவமானது மறுசுழற்சிகூடையின் உருவம் போன்று திரையில் பிரிதிபலிக்கும், இவற்றில்  இழக்கக்பபட்ட கோப்பினை தேடிப்பார்க்கவும் கோப்பின் பெயரே தெரியாத நிலையில் object=> find என்பதை தெரிவுசெய்க அதில் கோப்பின் வகையைமட்டும் குறிப்பிட்டு பச்சைவண்ண  குறியீட்டு பொத்தானை சொடுக்குக,
படிமுறை4: நாம் கொடுத்த நிபந்தனைகளுக்கு பொருத்தமான கோப்புகளின் பெயர் பட்டியலாக திரையில் ஒருசில நிமடநேரத்தில் காட்சியாக விரியும், அதிலிருந்து நாம்தேடிய கோப்பினை தேடிப்பிடிக்கவும் தேடியகோப்பு திரையில் பட்டியலிடப்படாத போது கோப்பின் அளவு, உருவாக்கிய அல்லது மாற்றம் செய்ததேதி போன்ற விவரங்களை கொடுத்து தேடும்படிக்கூறலாம் உடன் விரியும் பட்டியலின் மேல்பகுதியில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி வரிசைக்கிரமமாக முதலில் அடுக்கிவைத்து கொள்க,
உடன் அடுக்கப்பட்டு பிரிதிபலிக்கும் பட்டியலிலிருந்து கோப்பின் பெயரை ஒவ்வொன்றாக ctrl விசையைஅழுத்தி பிடித்துகொண்டு தேவையானவற்றை  தெரிவுசெய்க  பின்னர் சட்டியின் வலதுபுறம் சொடுக்குக உடன் விரியும் குறுக்கவழிபட்டியலில் send to என்பதை தெரிவுசெய்க,பின்னர்இந்த மீட்டாக்கம் செய்யப்படும் கோப்புகள் எந்த இடத்தில் சேமித்து வைக்கவேண்டும் என்பதை குறிப்பிடுக,
படிமுறை5இவ்வாறு மீட்டாக்கம் செய்யப்பட்ட கோப்பு சரியானதுதானா என சரிபார்க்கவிரும்புவோம் அதற்காக இந்த கோப்பினை திறந்து பார்த்து சரியாக இருந்தால் மட்டும் இந்த கோப்பிற்கு வேறுஒருபெயரிட்டு சேமித்துவைத்திடுக, நாம் தேடியகோப்பாக இல்லாதிருந்தால் மீண்டும் pc install file recovery சென்று வேறுவகையான வழிமுறையில் முயற்சிசெய்க,
படிமுறை6:விரைவான வடிவமைப்பு ,முறைமை இயங்காமல் சண்டிமாடுபோன்று படுத்துவிடுவது அல்லது பயன்பாட்டுமென்பொருளே இயங்காது உறைந்துபோவது என்பதுபோன்ற சூழலில்தரவுகளின்இழப்புஎற்பட்டிருந்தால் pc install file recovery சாளரத்தின் திரையின் இடதுபுற மத்தியில்உள்ள lost data என்ற பொத்தானை சொடுக்குக உடன் நீக்கம்செய்யப்பட்ட கொப்பினை மீட்டாக்கம் செய்வதுபோன்று செயல்பட்டு தொகுதிஅளவெல்லை உரையாடல்பெட்டி(Cluster range dialog box) தோன்றும் அதில் தருக்க இயக்ககத்திலிருந்து நாம்தேடிய இயக்கத்தை தெரிவுசெய்க பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்குக,உடன் நாம் உள்ளடுசெய்த நிபந்தணைகளுக்கேற்ற கோப்புகளின் பெயரை திரையில் பட்டியலாக காண்பிக்கும் அந்த பட்டியலிருந்து நாம் விரும்பும் கோப்புகளை மீட்டாக்கம் செய்துகொள்க,
படிமுறை7: உடன் pc install file recovery யானது நூற்றுக்கணக்கான உடைத்தெரியப்பட்ட  கோப்புகளின் விவரங்களை திரையில் பட்டியலிடும் இவைகளை பார்வையிட்டு படிமுறை 3முதல் 5 வரை பின்பற்றி மீட்டாக்கம் செய்துகொள்க, கோப்புகளைஒருங்கிணைத்துகொள்க,
படிமுறை8: பாகப்பிரிவினை அட்டவணையில் இழப்புஏற்பட்டிருந்தால் தருக்க இயக்ககத்தின்பெயர் பட்டியலாக பிரிதிபலிக்காதுஅதனால் துடிக்கும் இடம்சுட்டியை நகர்த்தி எங்குள்ளது என தேடிப்பார்க்கவேண்டும் வன்தட்டினைதெரிவுசெய்து வழக்கமான முறையில் #1 என பெயரை அமைத்திடுக,find logical drive என்பதை சொடுக்குக,
படிமுறை9: இயக்ககம் முழுவதும் வருடி தேடும்படிசெய்க, அல்லது தொலைந்துபோன இயக்ககம் எங்கிருக்கும் என தோராயமாக தேடும் படிசெய்க,பின்னர் பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்கி சிறிது நேரம் காத்திருக்கவும் தேடும் பணி முடிவடைந்ததும் பெறுகின்ற இயக்கத்திலிருந்து இயக்ககத்தின் பெயர் மற்றும் கோப்பகத்தின் பெயரை தெரிவு செய்து படிமுயை 3 முதல் 5 வரை பின்பற்றுக,

No comments:

Post a Comment