>>>PDF, PPT, Excel, Audio, Video File-களை Word - இல் Embed செய்வது எப்படி?

நாம் தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களில் முக்கியமானது MS Word. சில சமயங்களில் PDF, PPT, Excel, Audio, Video File-க Word File க்குள் Embed செய்ய வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 
இந்த பதிவில் ஒரு PPT file ஐ எப்படி Embed செய்வது என்று பார்ப்போம். 
1. முதலில் குறிப்பிட்ட Word File - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 
2. இப்போது அதில் எங்கே Powerpoint Presentation வர வேண்டுமோ அங்கே உங்கள் Cursor - ஐ வைத்துக் கொள்ளுங்கள். 
3. இப்போது Word - இல் Insert பகுதியில் Object என்பதை கிளிக் செய்யுங்கள். 
4. இப்போது வரும் சிறிய Window வில் Create From File என்பதை கிளிக் செய்யுங்கள். 
5. அடுத்து Browse மூலம் குறிப்பிட்ட Powerpoint File - ஐ நீங்கள் தெரிவு செய்து OK கொடுத்தால் Insert ஆகி விடும். 
6. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Powerpoint file இருக்கும். அதன் மீது Double Click செய்தால் போதும், Presentation Start ஆகி விடும். 
7. இதே போல PDF, Excel, Audio, Video File போன்றவற்றையும் Embed செய்ய முடியும். அவற்றின் மீது Double Click செய்து அவற்றை ஓபன் செய்திடலாம்.

>>>விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


"எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ" என்று ரஜினிகாந்தே சொல்லியிருக்கிறார். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரும் தம் புதிய விண்டோஸுக்கு எட்டாம் நம்பரைக் கொடுத்து விட்டனர்.  நிச்சயம் ரஜினி ரசிகர்களாக இருப்பார்கள்.
தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி டாப்லெட், ஸ்மார்ட்போன் என்று ஆன இச்சமயத்தில் கனமான போட்டிகளுக்கு இடையில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் மைக்ரோசாஃப்ட் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.விண்டோஸ் 8 ஐ "டாப்லெட்டிலும் ஓடுவேன், டெஸ்க்டாப்பிலும் ஆடுவேன்"என்று சகலகலாவல்லவன் கமல் பாணியில் (அப்பாடா, ரெண்டு பேர் ரசிகர்களையும் கவர்ந்தாயிற்று) எல்லாவற்றிலும் நிறுவக் கூடிய ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் வசதிகள் என்ன, புது செருப்பு காலை கடிப்பது மாதிரி  கடிப்பவை என்னென்ன என்று பார்ப்பது இந்த மெகா தொடரின்,மன்னிக்கவும்,  இந்தப் பதிவுகளின் நோக்கம்.
எனவே….
மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

  1. விண்டோஸ் 8 இல் ஸ்டார்ட் பட்டன் இருக்காது. என்னைக் காணவில்லையே எயிட்டோடு என்று பாடிவிட்டு ஒளித்து வைத்து விட்டனர். இது திகைப்பிலாழ்த்தினாலும் நாம் தான் ஒளிந்திருப்பதை கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாயிற்றே. அதை பிறிதொரு முறை தேடுவோம்.
மாறாக, அதன் ஸ்டார்ட் திரைக்கு அவ்வவ்போது வந்து போக வேண்டியிருக்கும். உ.ம், ஒரு புதிய யூஸர் அக்கவுண்ட்டைப் புதிதாகத் தொடக்கும் போது,  புகைப்படம், ஒரு பாட்டு இவற்றை இயக்க, பார்க்க இருக்கையில். இவற்றை டெஸ்க்டாப்பில் பார்க்க ஆரம்பித்தாலும் மறுபடி ஸ்டார்ட் திரைக்குக் கொண்டு வந்து விடும்.

  1. ஆப்பிள் ஐ-போடை விண்டோஸ் 8 கணினியில் இணைத்தால் "தம்பி யாருன்னே தெரியலையே" என்பது போல கண்டு கொள்ளாது.சமூகத்தின் உயரிய மட்டத்தில் வாழ்பவர்கள் என்பதன் அடையாளமான (ஸ்ஸ்ஸ், சோஷியல் ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதன் நீட்டி முழக்கம் அது) ஐ-போடை உபயோகிப்பவர்கள் ஒன்று ஆப்பிள் ஐ-டியூனை நிறுவிக் கொள்ள வேண்டும், அல்லது விண்டோஸ்(வேண்டுமென்றே) ஒரு பென் - டிரைவைப் போல பாவிக்கும் எக்ஸ்ப்ளோரரில் அதன் கோப்புகளை காப்பி செய்து கொள்ளலாம்.ஐ டியூன்ஸ் கொஞ்சம் எளிதான வழி இதற்கு.
  1. அடிக்கடி வொர்க்-ஸ்டேஷன் லாக் அவுட் ஆவது. இது ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும் போய் ஒரு காப்பியை கலந்து வைத்துக் கொண்டு வந்தால் படக்கென்று லாக் ஸ்க்ரீனைக் காண்பித்து மறுபடி கடவுச் சொல்லைக் கேட்கும். இதை கண்ட்ரோல் பேனலில் உள்ள கடவுச் சொல்லை அடிக்கடி கேட்டுத் தொல்லை பண்ணவும் என்பதை க்ளியர் பண்ணவும். எப்படி என்றால்...
- Right-click in any screen’s bottom-left corner and then choose Control Panel.
- From the Control Panel, click System and Security and then click Power Options.
- From the screen’s left edge, click Require a Password on Wakeup.
- When the window appears, most of the options are grayed out — inaccessible.
- Select the option labeled Change Settings That Are Currently Unavailable.
- Select the Don’t Require a Password option and then click the Save Changes button.

  1. எத்தனை கோடி விண்டோஸைத் திறந்தேன் இறைவா என்று வகைக்கொன்றாக பல விண்டோக்களைத் திறந்து வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைபாய்பவரா நீங்கள்? என்னென்ன விண்டோஸ் திறந்து ஆக்டிவாக இருக்கிறது என்பதை அறிய Altஎன்ற கீயையும் Tab ஐயும் அழுத்தவும். ஒரு சிறிய விண்டோவில் நீங்கள் திறந்திருக்கும் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டும். Tab ஐ அழுத்தி, விடுவித்துக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விண்டோ ஆக்டிவ் ஆக காட்டும் போது Tab ஐ விட்டு விட்டால் அந்த விண்டோ ஸ்க்ரீன் முன் வந்து விடும். இது விண்டோஸின் பழைய டெக்னிக் தான். விண்டோஸ் படம் போட்ட கீயையும் Tab ஐயும் அழுத்தினாலும் இதைப் போன்றே வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
  1. 8 இல் அட்மின் பயனாளராக இருப்பவருக்கே அனைத்து சலுகைகளும் உண்டு, இணையத்தில் உலாவ, புதிய மென்பொருளை நிறுவ இன்னபிற. சாதாரண பயனாளர் ஏற்கனவே இருப்பனவற்றை பயன்படுத்தலாம். இணையத்தில் உலாவ வேண்டுமானால் உங்கள் கணினி "எப்போதும் கனெக்ட்" ஆகி இருக்கும் இணைப்பை வேண்டுமானால் இவர்கள் பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் தங்கள் ப்ரொஃபைல் படத்தை சூரியகாந்தி பூவிலிருந்து சாமுராய் ஆக்கிக் கொள்ளலாம், கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.
கொசுறு: யுனிக்ஸ், மேக் ஆர்வலர்கள் "உலகத்திலேயே ஸ்டார்ட் ன்னு பட்டன் வைச்சு அதை க்ளிக் பண்ணிய உடனே ஷட் டவுன் என்ற பட்டனை வைப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரால் தான் முடியும்" என்று கேலி செய்ததாலோ என்னவோ ஷட் டவுனை விஸ்டாவிலிருந்து ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
இது ஒரு தொடக்கமே. விண்டோஸ் 8 இல் நிறைய இருக்கிறது தெரிந்து கொள்ள.எனவே தொடர்ந்து எதிர்பாருங்கள்.

>>>PowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள்...


Presentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம். 
ஆன்லைன் மாற்றும் ஆப்லைன் என்று இதனை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஆப்லைன் என்பது மென்பொருள். 
ஆன்லைன்:
ஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide - களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide - இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 

SlideRocket
ஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.

Google Docs Presentation (Google Drive)
MS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.

ஆப்லைன் : 
இவை MS Office க்கு மாற்றாக உள்ள மென்பொருட்களாக இருக்கும். 
OpenOffice - Impress
PowerPoint போன்றே ஒரு மென்பொருள் வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்தலாம். மிக எளிய இன்டெர்பேஸ், எளிய செயல்பாடு நம் வேலையை எளிதாக்கும். 
LibreOffice - Impress
இது OpenOffice - இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். பெரும்பாலான வசதிகள் OpenOffice போலவே தான் இருக்கும்.

>>>MS Word - இல் Drop Cap வசதியை பயன்படுத்துவது எப்படி?

Drop Cap என்பது நாம் அடிக்கடி பார்க்கும் ஒரு வசதி. பக்கத்தின் முதல் எழுத்தை மட்டும் பெரிது படுத்தி காட்டும் இந்த வசதி நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 
1. முதலில் உங்கள் MS Word - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 
2. Insert >> Drop Cap என்பதை கிளிக் செய்யுங்கள். 
3. இதை இரண்டு விதமாக நீங்கள் பயன்படுத்த முடியும். முதலாவது Dropped Drop Cap இரண்டாவது In Margin Drop Cap. 
4. Drop Cap Options என்பதை கிளிக் செய்து அந்த முதல் எழுத்தின் Font மற்றும் இதர Settings -ஐ மாற்றலாம். 
5. உதாரணமாக நான் முதல் எழுத்தின் Font - ஐ மாற்றி உள்ளேன். 

>>>OS இன்ஸ்டால் செய்வது எப்படி ? - எளிய தமிழ் கையேடு

என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான். 
அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம். 
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார். 
தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து  வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும். 

[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]

>>>The Web Blocker - குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்

இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 
இன்ஸ்டால் செய்து முடித்த Desktop - இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 
அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 
இப்போது "Add Address to Block List" என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User - க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து "Block Address" என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 
இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 
இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut - ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

>>>வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?

இப்போது உலகமே கணினி மயம். எந்த அளவுக்கு நன்மையோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது இணையத்தில். சில தளங்கள் தேவையற்ற தகவல்களை தந்து நம்மை, நம் மகன், மகள், மாணவர்களை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சரி எப்படி அவற்றை தடை செய்வது. இந்த கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு
நிறைய பேர் அதற்கு வழி சொல்லி இருப்பார்கள, நானும் அதையே சொல்லப் போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் புதுசா இருக்கும்.
முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மீது ரைட் கிளிக் செய்து "Manage" செல்லவும். இப்போது அதில் "Local User And Groups" என்பதை கிளிக் செய்யவும். இப்போது அதில் "user" என்பது இருக்கும் அதில் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Properties" பகுதிக்கு செல்ல்வும். இப்போது அதை படத்தில் உள்ளபடி செய்யவும்.

இப்போது மீண்டும் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Set Password" என்பதை கொடுத்து password set செய்து கொள்ளவும். 

இப்போது கம்ப்யூட்டரை "Log Off" செய்யவும். இப்போது இரண்டு account கள் வரும். அதில் administrator என்பதில் நுழையவும். இப்போது உங்கள் my computer ஐ ஓபன் செய்யவும். 

இதன் மூலம் எத்தனை தளம் வேண்டுமென்றாலும் தடை செய்யலாம். சாதாரணமாக இதை செய்ய இயலாது administrator Account மூலமாக மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். 
இனி உங்களை தவிர மற்றவர்களை மற்றொரு Account மூலம் வர செய்து, அந்த தளங்களை பார்க்க விடாமல் வைக்க முடியும்.