>>>கைத்தொலைபேசிகளின் இரகசியக் குறியீடுகள்

ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனமும் தனது கைத்தொலைபேசியின் விபரங்கள் தன்மைகளை அறிய சில இரகசிய எண்களை வைத்துள்ளது....

இதனை கைத்தொலைபேசி பயன்படுத்துனர்களுள் ஒரு சிலரே இதனை அறிந்து வைத்துள்ளனர்......

இந்த இரகசிய இலக்கமானது ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் வேறுபடும்......

அவற்றில் சில கீழே தரப்படுகின்றது........

NOKIA இரகசிய குறியீட்டு இலக்கங்கள்


*#7780# –Restore Factory setting க்கு

*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள

*#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த

*#67705646# -Operator Logo ஐ நிறுத்த

*#73# – Reset Timer

*#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய

*#92702689# – (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி)

--------------------------
---------------------------------------------------------------------------------

SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள்



*#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய

#*3849# – Reboot செய்வதற்கு

#*2558# – Time ON/OFF
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட

#*4760# – GSM. வசதிகளை ON/OFF செய்திட

*#9998*246# – Memory & Battery

*#7465625# – மொபைலின் Lock எந்த நிலையில் உள்ளது என்று அறிய

*#0001# – தொடர் இலக்கத்தை அறிய

*2767*637# –Unlock செய்திட

*#8999*636# –Storage திறனைக் காட்ட

*2562# – Reboot செய்திட

---------------------------------------------------------------------------------------------------------

LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்

 
கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#

எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#

கைத்தொலைபேசியில் உள்ள மென்பொருள் தொகுப்பின் பதிப்பு எண் அறிய – *8375#

கைத்தொலைபேசியின் IMEI எண்ணை அறிய –*#06#

கைத்தொலைபேசியின் (LG 7010 மற்றும் 7020) Sim Card lock சரி பார்க்க-2945#*70001#

LG-B 1200 கைத்தொலைபேசியின் Sim Lock சரி செய்திட 1945#*5101#

LG-B 5200 மற்றும் 510W கைத்தொலைபேசிகளின் Sim Lock Menu சரி செய்திட 2945#*5101#

LG 500 மற்றும் 600 கைத்தொலைபேசிகளின் Sim Lock சரி செய்திட 2947#*

---------------------------------------------------------------------------------------------------------

SONY ERICSSON கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்



இரகசிய குறியீட்டு இலக்கமானது மற்றைய கைத்தொலைபேசியின் குறியீடுகளை விட சற்று வித்தியாசமானது...
(-> என்பது press joystick, arrow keys or jogdial to the right and <- means left.)

IMEI (International Mobile Equipment Identity): *#06#

Firmware Version: >*<<*<*

Programming Checks: >*<<*<*> or >*<<*<*>

Accessing the phone without a SIM card: **04*0000*0000*0000# then on ‘Wrong Pin’ No

Reset English Menu: *#0000#

300, 600, 700 Series

Programming Menu (Short): 987 + >

Programming Menu (Long): 923885 + >

Field Test: 904090 + > (to exit 904090 + >)

Phone Test: 904059 + > (to exit 3 + <)

Phone Reset: 904060 + >

CDMA Mode: 904093 + menu

Analog Mode: 904095 + menu DM mode 904959 + menu

---------------------------------------------------------------------------------------------------------

Chinese கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்

இது அனைத்து Chinese phone க்கும் தொழிற்படாது.......
உங்களுடையதற்கு முயற்சி செய்து பாருங்கள்

Enter into Engineering Mode: *#110*01#

Enter into factory Mode: *#987#

Restore Factory Settings: *#987*99#

Check Software Version: *#900# OR *#800#

Default User Codes: 1122, 3344, 1234, 5678

Change LCD Contrast: *#369#

To Enable COM Port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200

Codes to Change Screen Language:

* *#0000# + Send : Set Default Language
* *#0007# + Send : Set Language to Russian
* *#0033# + Send : Set Language to French
* *#0034# + Send : Set Language to Spanish
* *#0039# + Send : Set Language to Italian
* *#0044# + Send : Set Language to English
* *#0049# + Send : Set Language to German
* *#0066# + Send : Set Language to Thai
* *#0084# + Send : Set Language to Vietnamese
* *#0966# + Send : Set Language to Arabic

-----------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில கைத்தொலைபேசிக்கான பொதுவான இரகசிய இலக்கங்கள்


More codes to reset chinese mobile phone
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#

Service codes Konka
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send

Service codes GStar
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

ZTE Mobile:>1- *938*737381#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatel:>E205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#

Service codes Spice
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#

Service codes Philips
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200

Service codes BenQ
software version: *#300#
test mode: *#302*20040615#

Service codes Pantech
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#

Service codes VK-Mobile **x, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)

Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)

Service codes Sony-Ericsson
J100 software version: #82#

Service codes Motorola
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and "yes"''

>>>Funny Photo Maker - கேலி முக சித்திர மாற்றி மென்பொருள் 2.10

மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்!
அம்சங்கள்:
முற்றிலும் இலவச கட்டணம்
பயன்படுத்த மிகவும் எளிதானது;
பகட்டான பிரேம்கள், கேலி முக சித்திர விளைவுகளை கொண்டது
முழு தனி பயனாக்க அமைப்புகளை இணைந்து வழங்குகிறது;
ஆதரவு திருத்தல்: BMP, JPG, PNG
உயர் தர ஏற்றுமதி: BMP, JPG, PNG & GIF
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7

Download:
http://www.funny-photo-maker.com/setup_funny_photo_maker.exe

Size:39.64MB

>>>Fomat Factory வீடியோ கன்வர்டர் மென்பொருள்

பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறு விதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ மாற்றி மென்பொருள் நான் உபயோகித்து பார்த்தவரையில் சிறப்பானதாக தெரிகிறது. கிட்டத்தட்ட தற்போது கணினி உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான வீடியோ பைல்களையும் கையாள்கிறது. மேலும் வீடியோக்களை ஒன்று சேர்த்தல்,வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுப்பது என பல்வேறு வேலைகளை செய்கிறது.வீடியோ மட்டுமன்றி,ஆடியோ,புகைப்படம் மற்றும் டிவிடி ஃபார்மேட்டுகளையும் சிறப்பாக மாற்றுகிறது.டிவிடி இலிருந்து ஒரு படத்தை ஒரு வீடியோ ஃபைலாக மாற்றிவிட இயலும்.


சிறப்பம்சம்:
மொபைல் போன்களுக்கேற்ற வகையில் வீடியோக்களை Conveert செய்ய தனியான menu கொண்டு காணப்படுகின்றமை (இதன் மூலம் உங்கள் போன் மொடலினை கொடுத்து அதற்கேற்றால் போல் வீடியோக்களை convert செய்யலாம்
வீடியோ ஆடியோ மற்றுமன்றி புகைப்படங்களையும் convert செய்யும் வசதி
பல துண்டுகளாக காணப்படும் வீடியோ படங்களை ஒரே கோப்பாக்கும் வசதி
ஒரு துண்டாக காணப்படும் வீடியோ படத்தை பல துண்டாக்கும் வசதி
இதன் மூலம் உங்களுக்கு தேவையான வகையில் வீடியோ ஆடியோவை வெட்டிக் கொள்ளலாம்
DVD Ripper வசதி

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7

Download:
http://www.pcfreetime.com/public/FFSetup3.0.1.zip.torrent

>>>உலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இலவச மின்நூலகம்

காலத்தால் என்றும் அழியாத ப
பொக்‌கிஷங்களான வரலாற்று தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை ஆன்லைன் மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது.

இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்று புத்தகங்களும் வரும் இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாக தேடிப்படிக்கலாம்.

தேவையான பக்கங்களை ஒலியாகவும் கேட்கலாம் என்பது இந்த மின் நூலகத்தின் சிறப்பு.

வரலாற்று பதிவுகளை தேடுபவர்களுக்கு இந்த இளையதளம் ஒரு வரப்பிரசாதம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்
http://www.wdl.org/en/

>>>இயங்காமல் நின்றுபோனவன்தட்டிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல்

வன்தட்டானது திடீரென வேலைநிறத்தம் செய்துஇயங்காமல் நின்றுவிடும் சமயத்தில் இதுவரை பயன்படுத்திய தரவுகளை இழப்பேதுமில்லாமல் எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுதான் மிகப்பெரும்தலைவலியாகும்,
இவ்வாறான இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு நிம்மதிஇழந்து தவிக்கும் நேரத்தில் pc install என்ற இலவச கருவி உங்கள் உதவிக்கு வந்து உங்களுக்கு மன நிம்மதியை வழங்குகிறது,
சி இயக்ககம் தவிர மற்றவை எனில் இந்த கருவியை விண்டோவில் நிறுவியும், வன்தட்டு முழுவதும் எனில் வேறு கணினியில் இந்த கருவியை நிறுவி இயங்காமல் நின்றுபோன கணினியை இரண்டாவது இயக்ககமாக இணைத்துகொண்டு பின்வரும் படிமுறைகளின் படி செயல்படுத்துங்கள்
படிமுறை1: இந்த pc install file recovery என்ற கருவியை நிறுவுகை செய்வதற்காக இதனுடைய இயக்க கோப்பினை செயல்படுத்துங்கள் தோன்றிடும் திரையில் English என்பதை இதன்மொழியாக தேர்வுசெய்யுங்கள்என்னவகையான தரவை மீளப்பெறவேண்டும் என்பதற்கான இதன் இடதுபுறத்தில் உள்ள மூன்றுபொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக
தரவுகளைமட்டும் மீட்டாக்கம் செய்வதுஎனில் படிமுறை 6-க்கு நேரடியாக செல்க,இயக்ககங்களை மீட்டாக்கம் செய்வது எனில் படிமுறை 8-ற்கு நேரடியாக செல்க, அழித்த தரவுகளெனில் சாளரத்தின் மேலே இடதுபுறமுள்ள உருவத்தை சொடுக்குக
படிமுறை2: எந்த இயக்ககத்தை மீட்டாக்கம் செய்யப்போகின்றோம் என்பதை தெரிவுசெய்க,உடன் இந்த கருவியானது வன்தட்டின் பாகப்பிரிவினையை வருடி இதன் உள்ளடக்கத்தை பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது ,பெரும்பாலும் தருக்க இயக்ககத்திலிருந்தே தேவையான இயக்கத்தை தெரிவுசெய்க அதனால் உடன் வன்தட்டின் உள்ளடக்கங்கள் இருமுறை பட்டியலிடப்படும் c ,d, e,f,போன்று இயக்ககங்களின் பெயரை வரிசையாக தெரிவு செய்து இவற்றின் உள்ளடக்கத்தை வருடி பட்டியலிடச் செய்க,முன்காட்சி  பொத்தானை சொடுக்கி இதனை திரையில் சரிபார்க்கவும்,பின்னர் அடுத்த படிமுறைக்குசெல்வதற்கான next என்ற பொத்தானை சொடுக்குக,
படிமுறை 3: வருடச் செய்வதற்காக ஒருசிலநிமிடநேரம் எடுத்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட இயக்கத்தில் நீக்கம் செய்யப்பட்ட கோப்பகத்தின் உருவமானது மறுசுழற்சிகூடையின் உருவம் போன்று திரையில் பிரிதிபலிக்கும், இவற்றில்  இழக்கக்பபட்ட கோப்பினை தேடிப்பார்க்கவும் கோப்பின் பெயரே தெரியாத நிலையில் object=> find என்பதை தெரிவுசெய்க அதில் கோப்பின் வகையைமட்டும் குறிப்பிட்டு பச்சைவண்ண  குறியீட்டு பொத்தானை சொடுக்குக,
படிமுறை4: நாம் கொடுத்த நிபந்தனைகளுக்கு பொருத்தமான கோப்புகளின் பெயர் பட்டியலாக திரையில் ஒருசில நிமடநேரத்தில் காட்சியாக விரியும், அதிலிருந்து நாம்தேடிய கோப்பினை தேடிப்பிடிக்கவும் தேடியகோப்பு திரையில் பட்டியலிடப்படாத போது கோப்பின் அளவு, உருவாக்கிய அல்லது மாற்றம் செய்ததேதி போன்ற விவரங்களை கொடுத்து தேடும்படிக்கூறலாம் உடன் விரியும் பட்டியலின் மேல்பகுதியில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி வரிசைக்கிரமமாக முதலில் அடுக்கிவைத்து கொள்க,
உடன் அடுக்கப்பட்டு பிரிதிபலிக்கும் பட்டியலிலிருந்து கோப்பின் பெயரை ஒவ்வொன்றாக ctrl விசையைஅழுத்தி பிடித்துகொண்டு தேவையானவற்றை  தெரிவுசெய்க  பின்னர் சட்டியின் வலதுபுறம் சொடுக்குக உடன் விரியும் குறுக்கவழிபட்டியலில் send to என்பதை தெரிவுசெய்க,பின்னர்இந்த மீட்டாக்கம் செய்யப்படும் கோப்புகள் எந்த இடத்தில் சேமித்து வைக்கவேண்டும் என்பதை குறிப்பிடுக,
படிமுறை5இவ்வாறு மீட்டாக்கம் செய்யப்பட்ட கோப்பு சரியானதுதானா என சரிபார்க்கவிரும்புவோம் அதற்காக இந்த கோப்பினை திறந்து பார்த்து சரியாக இருந்தால் மட்டும் இந்த கோப்பிற்கு வேறுஒருபெயரிட்டு சேமித்துவைத்திடுக, நாம் தேடியகோப்பாக இல்லாதிருந்தால் மீண்டும் pc install file recovery சென்று வேறுவகையான வழிமுறையில் முயற்சிசெய்க,
படிமுறை6:விரைவான வடிவமைப்பு ,முறைமை இயங்காமல் சண்டிமாடுபோன்று படுத்துவிடுவது அல்லது பயன்பாட்டுமென்பொருளே இயங்காது உறைந்துபோவது என்பதுபோன்ற சூழலில்தரவுகளின்இழப்புஎற்பட்டிருந்தால் pc install file recovery சாளரத்தின் திரையின் இடதுபுற மத்தியில்உள்ள lost data என்ற பொத்தானை சொடுக்குக உடன் நீக்கம்செய்யப்பட்ட கொப்பினை மீட்டாக்கம் செய்வதுபோன்று செயல்பட்டு தொகுதிஅளவெல்லை உரையாடல்பெட்டி(Cluster range dialog box) தோன்றும் அதில் தருக்க இயக்ககத்திலிருந்து நாம்தேடிய இயக்கத்தை தெரிவுசெய்க பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்குக,உடன் நாம் உள்ளடுசெய்த நிபந்தணைகளுக்கேற்ற கோப்புகளின் பெயரை திரையில் பட்டியலாக காண்பிக்கும் அந்த பட்டியலிருந்து நாம் விரும்பும் கோப்புகளை மீட்டாக்கம் செய்துகொள்க,
படிமுறை7: உடன் pc install file recovery யானது நூற்றுக்கணக்கான உடைத்தெரியப்பட்ட  கோப்புகளின் விவரங்களை திரையில் பட்டியலிடும் இவைகளை பார்வையிட்டு படிமுறை 3முதல் 5 வரை பின்பற்றி மீட்டாக்கம் செய்துகொள்க, கோப்புகளைஒருங்கிணைத்துகொள்க,
படிமுறை8: பாகப்பிரிவினை அட்டவணையில் இழப்புஏற்பட்டிருந்தால் தருக்க இயக்ககத்தின்பெயர் பட்டியலாக பிரிதிபலிக்காதுஅதனால் துடிக்கும் இடம்சுட்டியை நகர்த்தி எங்குள்ளது என தேடிப்பார்க்கவேண்டும் வன்தட்டினைதெரிவுசெய்து வழக்கமான முறையில் #1 என பெயரை அமைத்திடுக,find logical drive என்பதை சொடுக்குக,
படிமுறை9: இயக்ககம் முழுவதும் வருடி தேடும்படிசெய்க, அல்லது தொலைந்துபோன இயக்ககம் எங்கிருக்கும் என தோராயமாக தேடும் படிசெய்க,பின்னர் பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்கி சிறிது நேரம் காத்திருக்கவும் தேடும் பணி முடிவடைந்ததும் பெறுகின்ற இயக்கத்திலிருந்து இயக்ககத்தின் பெயர் மற்றும் கோப்பகத்தின் பெயரை தெரிவு செய்து படிமுயை 3 முதல் 5 வரை பின்பற்றுக,

>>>எக்செல்லில் வாடிக்கையாளர் விரும்பும் தானாகவே பூர்த்தி செய்யும் ( Custom Auto fill) வசதி

 எக்செல்லில் ஓரு பட்டியலை தொடர்ந்து தட்டச்சு செய்யும்போது Auto fill என்ற வசதியை பயன்படுத்தி மிகுதியை தானாகவே பூர்த்தி செய்வதை பார்த்திருப்போம். உதாரணமாக Jan, Feb, Mar போன்ற மாதத்தின் பெயர்கள், Sunday, Monday, Tuesday போன்ற வாரத்தின் நாட்களை தானாகவே பூர்த்தி (Auto fill) செய்யும் வசதி மூலம் பயன்பெற்றிருப்போம். அவ்வாறே நாம் விரும்பும் மற்ற பட்டியல்களையும் எக்சலில் பெற முடியுமா? 
     உதாரணமாக ஒரு நிறுவனத்தின் விற்பனையை கோட்ட வாரியாக தயார் செய்ய கோட்டங்களின் பெயர் இந்த தானாக பூர்த்தி செய்யும் Auto fill வசதி மூலம் எவ்வாறு முடியும் என்பதை இப்போது காண்போம்.
    படம்1ல் உள்ளவாறு எக்சலின் கட்டளை பட்டியலில் (Menu bar)   உள்ள Tools என்பதை சொடுக்குக. உடன் திரையில் தோன்றும் பட்டியலிருந்து option என்பதை தெரிவு செய்க.
     பின்னர் திரையில் தோன்றும் உரையாடல் பெட்டியில் Custom lists என்ற பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர் திரையில் விரியும் Custom lists என்பதில் new list என்பதை தெரிவு செய்து வலதுபுறம் உள்ள list entries  என்ற பகுதியில் நாம் விரும்பும் பட்டியலின் பெயரை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக  கால்புள்ளியிட்டு தட்டச்சு செய்க. அல்லது இந்த பட்டியில் வேறு எங்காவது இருந்தால் import வசதி மூலம் உள்ளே கொண்டு வருக.
   பின்னர் add  பொத்தானை சொடுக்குக.உடன் இவ்வாறு உள்ளீடு செய்த பட்டியல் Custom Listல் தானாகவே சேர்ந்துவிடும்.
     பின்னர் Ok என்ற பொத்தானை சொடுக்குக. இப்போது நீங்கள் உருவாக்கிய பட்டியல் Auto fill வசதி மூலம் எக்சல் விரிதாளில் கொண்டு வர முடியும்.

>>>பயாஸ் (BIOS)என்றால் என்ன?

Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும்  இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில்  கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory)    ஆகியவற்றை பற்றிய  மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை  திரையில் காண்பிக்கும்.   இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது  வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து  சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System)  இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில்  முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.
        ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது.  இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது